அன்னாசிப்பழ நாற்றுக்களை வழங்க கோரிக்கை
Admin    a month ago    3101
Item number 1

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி பகுதியில் விளையும் அன்னாசி பழங்களுக்கு எப்போது தட்டுப்பாடு அதிகம். வனவிலங்குகள் வரவால் விவசாய பரப்பு சுருங்கி வரும் நிலையில், வீடுகளின் கொல்லை புறங்களில் அன்னாசி பயிரிடப்படுகிறது. இதனால் கேரளா மற்றும் பிற பகுதியில் இருந்து அன்னாசி பழங்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டக்கலைத்துறை நாற்றுக்கள் வழங்கி சூரிய மின்வேலி அமைத்து அன்னாசி விவசாயத்தை அதிகரித்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்றனர்.