வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்
Admin    4 weeks ago    1177
Item number 1

அரூர் பகுதியில் வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களை, விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதியில் தென்னை மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் தண்ணீர் இல்லாமல், தென்னை மரங்கள் காய்ந்து போனது.

இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, மரக்கடைகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும் வெட்டி அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் மரங்களை வெட்டி, சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர்.