விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி..!
Admin    4 weeks ago    80
Item number 1

செங்கல்பட்டு மாவட்டம், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வருகின்ற 10-ம் தேதி அன்று விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 10.03.2020 (செவ்வாய்)

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இடம் :காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம்,
பொத்தேரி,
செங்கல்பட்டு மாவட்டம்.

தொடர்புக்கு : 044-27452371

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

 இப்பயிற்சி வகுப்பில் ஆட்டு இனங்கள், ஆடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, ஆடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடன் உதவி போன்றவை குறித்து கற்றுத்தரப்படுகிறது.

 இதில் இளைஞர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.