மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடி
Admin    2 months ago    182
Item number 1

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பழைய ஆயக்கட்டு பகுதியில், நெல் மற்றும் கரும்பு புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம், காய்கறி மற்றும் பயிறு வகை பயிர்களும் சாகுபடி ஆகிறது.

இந்தப் பயிர்களுக்கு பாசன நீர் கூடுதலாக தேவைப்படுகிறது. இதனால், பாசன நீர் குறைவாக உள்ள புதிய ஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளி கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். ஒரு ஏக்கர் நிலத்தை பராமரித்து உழவு செய்து, கன்றுகள் நடவு செய்வது தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்க்க தொடங்கும் வரை, ஒரு ஏக்கருக்கு, ரூ.50,000 முதல் 60,000 வரை செலவாகிறது. பத்து மாதத்தில் இருந்து பப்பாளிப் பழங்கள் பறிக்கத்தொடங்கலாம். 20 முதல் 25 மாதம் வரை மகசூல் கொடுக்கும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறைந்த அளவு பாசன நீர் பப்பாளி சாகுபடிக்கு போதுமானதாகும். இதற்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளது. விலையும் சீராக கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது என்றனர்.