கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்காலிக நிறுத்தம்
Admin    2 months ago    86
Item number 1

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, ஆண்டுக்கு இரண்டு முறை, 21 நாட்களுக்கு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு, தடுப்பூசி போடும் பணி, மத்திய அரசின் கால்நடை கணக்கெடுப்பு முடிந்த பிறகே, டோக்கன் அடிப்படையில், தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட, 37 மையங்களில், கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய இப்பணி, எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில், 32,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இச்சூழலில், கரோனா தொற்று பரவ துவங்கியதால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. பொள்ளாச்சி கோட்டத்தை சேர்ந்த கால்நடை மருத்துவ குழுவினர், கேரளா எல்லைகளில், பறவை காய்ச்சலை தடுப்பு பணிக்கு அனுப்பப்பட்டனர். இதனை தொடர்ந்து, கரோனா பரவல் வேகமெடுத்ததால், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி முற்றிலும் தடைபட்டது.

இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள முடியவில்லை. தடுப்பூசி முகாம், 10 நாட்கள் நடந்துள்ளது. மீதமுள்ள நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பின், முகாம் நடக்கும் எனத் தெரிவித்தனர்.