உரிய விலை கிடைக்காததால் செண்டுப்பூ பறிப்பது நிறுத்தம்
Admin    2 months ago    90
Item number 1

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் பல கிராமங்களில் செண்டுப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பங்குனி பொங்கல் என்ற கிராம பொங்கல் விழாக்கள், வீரபாண்டி கோயில் விழா இவற்றை கணக்கில் கொண்டு கடந்த சில மாதத்திற்கு முன் விவசாயிகள் செண்டு பூக்கள் நடவு செய்தனர். அவை தற்போது அதிகம் பூத்துள்ளது

. கரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு அனுப்ப வாகனங்கள் இயங்காததால் பூக்களை அனுப்ப முடியவில்லை. உள்ளூர் தேவையும் குறைவால் விலை இல்லை. இதனால் செடிகளில் பறிக்காமல் விட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்ததாவது : தற்போது பூக்கள் விலை கிலோ ரூ.20க்கும் குறைவாக இருப்பதால் பறிப்புக்கூலி, போக்குவரத்து செலவால் நஷ்டமே ஏற்படும். மேலும், ஊரடங்கால் பூ மார்க்கெட்டும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்கள் பறிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் பறிக்கப்படும் மல்லிகை, கனகாம்பரத்தை சில விவசாயிகள் உள்ளூரில் தெருத்தெருவாக குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர், என்றார்.