வேளாண் இடுபொருள்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Admin    a month ago    252
Item number 1

இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில் காரீப், குறுவை, சொர்ணவாரி, கோடை பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நடவுப் பணிகள் மற்றும் விதைப்புக்கு அரசின் முன்னோடி திட்டமான கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள் மூலம் உழவு, நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராபி, பிசானம் பருவ நெல், நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறுவை, சித்திரை பட்டத்துக்குத் தேவையான நெல், உளுந்து, எண்ணெய் வித்து விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் இடுபொருள்கள், விவசாயிகளின் கிராமங்களிலேயே கிடைக்க வாகனங்கள் மூலம் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, விவசாயிகள் உரக்கடைகளை நாடிச் செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு, சில இடங்களில் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக உரங்களும் விற்பனை செய்யப்படுகிறது.

எய்சா் டிராக்டா்கள், வேளாண் இயந்திரங்கள் மூலம் அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறு, குறு விவசாயிகள் 90 நாள்களுக்கு வாடகையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாய தொழிலாளர், கருவிகள் தடையின்றி செல்ல வேளாண்மைத் துறை அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வேளாண்மை உதவி இயக்குநர்களை 94435 90920 (பெரம்பலூர்), 97891 42145 (ஆலத்தூர்), 88256 31615 (வேப்பூர்), 80128 49600 (வேப்பந்தட்டை) ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான உதவிகள், சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம்.