மக்காச்சோளம் இருப்பு அதிகரிப்பு
Admin    2 weeks ago    78
Item number 1

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில், 60,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த, 4 மாதத்திற்கு முன் அறுவடை துவங்கிய நிலையில், பல்வேறு காரணங்களினால், மக்காச்சோளம் விலை கடும் சரிவை சந்தித்தது. விதைப்பின் போது, குவிண்டால், ரூ.2,700க்கு விற்பனையான நிலையில், அறுவடையின் போது, வரத்து அதிகரிப்பு, கோழி, மாட்டுத்தீவன நிறுவனங்கள் கொள்முதல் குறைப்பு ஆகிய காரணங்களினால், குவிண்டால், ரூ.1,400 ஆக குறைந்தது. இதனால், மக்காச்சோளம் அறுவடை செய்த விவசாயிகள், இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளத்திற்கு போதிய விலை இல்லாததால், கதிர்களை அப்படியே, குவித்து வைத்தும், தானியமாகவும் இருப்பு வைத்தனர். தற்போது, தென்மேற்கு பருவ மழை துவங்கும் சூழல் உள்ளதால், பாதுகாப்பாக இருப்பு வைக்கும் வகையில், உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இருப்புக்கு கொண்டு வரத் துவங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், இரண்டரை டன் மக்காச்சோளம் இருப்புக்கு வந்துள்ளது என்றனர்.