கால்நடை தீவனம் விற்பனைக்கு அனுமதி? ஆட்சியர்களுக்கு இயக்குநர் கடிதம்

கால்நடை தீவனம் விற்பனைக்கு அனுமதி? ஆட்சியர்களுக்கு இயக்குநர் கடிதம்

அக்கடிதத்தில், கால்நடைத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளதாவது : அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும், அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளை நிலையங்கள் போன்றவற்றில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், அடையாள அட்டையுடன், பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளுக்கான உணவு விற்பனை செய்யும் கடைகள், கால்நடை தீவனம் விற்பனை நிலையங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும், தெரு நாய்களுக்கு, உணவு அளிப்போர், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், குறிப்பிட்ட நேரங்களில், உணவு வழங்க அனுமதிக்க வேண்டும்.

கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கான தீவனங்களை, மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். காயமடைந்த விலங்குகளை, சிகிச்சைக்காக வாகனங்களில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.