பயிர் சுழற்சி முறை
Admin    2 years ago    6564
Item number 1

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறைபயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.

 

  • சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.

 

  • அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்

 

  • தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.

 

  • நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்

 

  • பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு

 

  • வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்

 

  • சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.

 

  • மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.

 

  • சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்

 

  • ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு - உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு

 

  • அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்

 

  • ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் - நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.

 

  • சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

 

  • ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்

 

  • சில வறட்சி தாவரங்களைத் தொடர்ந்து ஈரப்பதம் விரும்பும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நெல் - கொண்டைக் கடலை

 

  • சில பூச்சிகள் குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. எனவே அவ்வகைப் பயிர்களை பயிரிட்ட பின் அடுத்தமுறை வேறு குடும்பத்தைச் சார்ந்த பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: கரும்பு – துலுக்க மல்லி போன்றவை நூற்புழுவால் பாதிக்கப்படும். தக்காளி / கத்தரி / புகையிலை / உருளைக் கிழங்கு – நெல் / பயிறுவகை போன்றவை ஒரபஞ்சித் தாவரத்திற்கும், கம்பு – ஆமணக்கு போன்றவை ஸ்டிரைகாவிற்கும், பெர்ஸிம் – ஓட்ஸ் போன்றவை கஸ்குட்டாவிற்கும் பயிர்செய்யப்படுகின்றன.

 

  • சில பயிர்களில் ஒரு குறிப்பிட்ட வகைக்களைச் செடிகள் தொடர்ந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இப்பிரச்சினையைத் தடுக்க சுத்தப்படுத்தும் முன் பயிரிலிருந்து வேறுபட்ட ஒரு பயிரைப் பயிரிட வேண்டும். எ.கா: கோதுமை – நெல் (பைலாரிஸ் மைனர் எனும் களைச் செடி) பெர்ஸீம் – உருளைக் கிழங்கு / போரோ அரிசியில் சிகோரியம் இன்டைபஸ் என்ற களை, கடுகு, முன்பருவ உருளைக் கிழங்கு - கிலியம் விஸ்கோஸ், அரிசி – சணல் / கரும்பு / காய்கறிகள் / மக்காச்சோளம் + அவரை போன்றவற்றில் எக்கினோகுளோவா கிரஸ்கல்லி, சணல் – காய்கறிகள் கார்கோரஸ் அக்குடன் குலஸ்.

 

  • மேய்ச்சல் பயிர்களுக்குப் பின் தீவனம் அல்லது வேறு ஏதேனும் விதைப்பயிர்களை விதைக்கலாம். எ.கா: பாரா புல் – சோளம் + அவரை / நெல்.

 

  • சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகும் விதைத் தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: மக்காச் சோளம் / நிலக்கடலை – வெங்காயம் / அவரை / கம்பு (விதைத் தாவரம்)

 

  • பொதுவாக ஓம்புயிர்த் தாவரங்களைப் பயிரிட்ட பின் கீழ்க்காணும் சார்நிலை உயிரினங்களுடன் கூடிய பயிர்களைப் பயிரிட வேண்டும்.

 

  1. ரைஸோபியம் மெலிலோட் – லியூசர்னா , இனிப்பு குளோவர், வெந்தயம்
  2. ரைஸோபியம் டிரைபோலி – பெர்ஸீம், பெர்ஸியன் குளோவர்
  3. ரைஸோபியம் லெகூமினோஸோரம் – மைசூர் பருப்பு, கேசரி பருப்பு, பட்டாணி
  4. ரைஸோபியம் பர்ஸயோலி – பீன்ஸ், பச்சைப் பயிறு, உளுந்து, பில்லிபெஸாரா
  5. ரைஸோபியம் லியூபின் – லியூபின்ஸ்
  6. ரைஸோபியம் ஜப்பானிகம் – அவரை, தட்டைப்பயிறு, சனப்பை, கொண்டைக்கடலை, சோயாபீன்

 

  • ஒரே பயிரை பயிரிடாமல் இவ்வாறு பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது மிகுந்த இலாபத்தை ஈட்டித் தரும். அத்தோடு மண் வளத்தைப் பாதுகாக்க ஏதுவாகிறது.

http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf/ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bbfba9bcd-ba4bc6bbeb95bc1baabcdbaabc1/baabafbbfbb0bcd-b9abc1bb4bb1bcdb9abbf-baebc1bb1bc8