விவசாயம்(மாடுகளுக்கு உலர்புல் தயாரிக்க எளிதான வழிமுறைகள்..
Admin    3 months ago    1766
Item number 1

கால்நடைகளுக்கு தீவனம் என்பது இன்றியமையாதது எனலாம். அப்படிப்பட்ட தீவனங்களை கால்நடைகள் விரும்பும் எடுத்துக்கொள்ளும் வகையில் நாம் அவற்றிற்கு கொடுக்க வேண்டும். அந்த வகையில் உலர்புல் தயாரிக்கும் முறை குறித்து இங்கு காணலாம். 

கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனங்களின் தன்மை :

 நாம் கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனமானது பசுமையான இலைகளை கொண்டிருக்க வேண்டும்.

 மேலும் அவை எளிதில் செரிமானம் ஆக கூடியதாக இருக்க வேண்டும்.

 மண், அழுக்கு மற்றும் களைச் செடிகள் இன்றி தீவனங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் பு+ஞ்சாணப் பாதிப்பு இல்லாமல் இருத்தல் வேண்டும்.

உலர்புல் தயாரிக்கும் முறைகள் :

 உலர்புல் தயாரித்தலில் மூன்று முறைகள் உள்ளன. 

நிலத்தில் பரப்பி உலர வைத்தல் :

 அறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி வைத்து, அதை அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும். பெரும்பாலும் இம்முறையிலேயே உலர்புல் தயாரிக்கப்படுகிறது.

சிறு கட்டுகளாக கட்டி உலரவைத்தல் :

 சோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்களை அறுவடைக்குப்பின் சிறுசிறு கட்டுகளாக கட்டி உலர வைக்கலாம். 

முக்கோணக் கூம்பு வடிவ முறை :

 தீவனப்பயிர்களைச் சிறுசிறு கட்டுகளாக கட்டி, அதை கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம். 

உலர்ப்புல்லின் நன்மைகள் : 

 தீவனப்பயிர்களை உலர வைப்பது எளிதாக இருக்கும்.

 தீவனப்பயிர்களில் உள்ள சத்துகள் சேதாரமாகாமல் இருக்கும்.

 மேலும் இந்த தீவனங்களை கால்நடைகள் விரும்பி உண்ணும்.

 பயறு வகைத் தீவனங்களை இம்முறையில் உலரவைத்துச் சேமிப்பது எளிதாக இருக்கும்.