width:600px height:450px மேலாண்மை செய்திகள்

மண்பானை விற்பனை அதிகரிப்பு




கோடைக்கு முன்பே வெயில் அதிகரிப்பின் காரணமாக மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் கோடை துவங்குவதற்கு முன்பாக, பருவநிலை மாற்றத்தால் பிப்ரவரியிலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

கோடையை சமாளிக்க இயற்கை சார்ந்த விஷயங்களில் பொதுமக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அதிக தாகத்தை சமாளிக்க மண்பானை தண்ணீர் குடிக்க விரும்புகின்றனர். இதனால் மண்ணால் செய்யப்பட்ட பானை விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து சீலையம்பட்டி மண்பானை வியாபாரி ஒருவர் கூறுகையில், மண்பானை வைத்து, அதில் வெட்டி வேரை போட்டு நிரப்பப்படும் தண்ணீர் தாகத்தை தணிப்பதுடன், வெக்கை அயற்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனால் மண்பானையை மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கோடை துவங்கும் போது மண்பானை தேவை அதிகரிக்கும் என்றார்.




தற்போதைய செய்திகள்