கால்நடைகளுக்கு தடுப்பூசி போட ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என மன்னார்குடி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சான்சன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது: கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளுடன் முகாமுக்கு வரும்போது ஆதார் அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றை கொண்டுவந்து கொடுத்து ஆன்லைன் கால்நடை கணக்குகளை ஏற்றிய பின்பு தான் கால்நடைகளுக்கு காது வில்லை பொருத்தி பின்னர் தடுப்பூசி போடப்படும். வரும் காலங்களில் கால்நடைகள் காணாமல் போனால் அதற்கு இன்சூரன்ஸ் பெறுவதற்கு பயனுடையதாக இருக்கும். எனவே, இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 100 சதவீதம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவேண்டும் என அவர் தெரிவித்தார்.
