தேன் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.150 என நிர்ணயிக்க கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேன் உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைப்பாளர் எஸ்.ஆமோஸ் தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் உற்பத்திச் செலவை கருத்தில் கொண்டு கூட்டுறவுத்துறை மற்றும் கதர்கிராம வாரியம் ஆகியவை கொள்முதல் செய்யும் ஒரு கிலோ தேனின் விலையை ரூ.150 என நிர்ணயம் செய்ய கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
