width:630px height:423px செய்திகள்

மாடித் தோட்டத்தில் மூலிகை செடி தோட்டக்கலைத்துறை தகவல்




மூலிகை செடியுடன் கூடிய மாடித் தோட்டம் அமைக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் வீடுகளின் மாடியில், காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை ஊக்குவித்து வருகிறது. மாடி தோட்டம் அமைக்க, விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, அவிநாசி தோட்டக்கலைத் துறை சார்பில், 600 பேருக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட, 5 வகை காய்கறி விதை தொகுப்பும் அவற்றை நடவு செய்ய பை, தேங்காய் நார் பித், பிளாஸ்டிக் விரிப்பு உள்ளிட்ட உபகரணம், இயற்கை உரம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்தாண்டு, முதன்முறையாக, காய்கறி விதையுடன் சேர்த்து, இரண்டு வகை மூலிகை செடிகளும் வழங்கப்பட உள்ளன. இந்த விதை தொகுப்பின் விலை, ரூ.1,250 ஆகும்.

இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மாலதி கூறுகையில், மாடித்தோட்டம் அமைக்க விதை தொகுப்பு தேவைப்படுவோர், தங்களது ஆதார் அட்டை நகலை வழங்கி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 




தற்போதைய செய்திகள்