width:577px height:295px செய்திகள்

குறுவை சாகுபடிக்காக, சோளத்தட்டு அறுவடை பணிகள் மும்முரம்




குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றுப்பகுதியில், சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 100 அடியை தாண்டிய நிலையில் தொடர்கிறது. அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காக வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் வரும் ஜூன், ஜூலை மாதங்களில், தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன், 12ல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, காவிரி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடியை முடித்த பிறகு, கால்நடைகளின் உணவுக்காக, சாகுபடி செய்யப்பட்ட, சோளத்தட்டைகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் தெரிவித்துள்தாவது: நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் மழை பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பும் திருப்திகரமாக இருப்பதால், குறுவை சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முதல் கட்டமாக, சோளத்தட்டுகளை அறுவடை செய்து விட்டு, நெல் சாகுபடிக்காக, அவுரி விதையை பயிரிட உள்ளோம். சோளத்தட்டு ஒரு கட்டு, ரூ.10க்கு கால்நடை வளர்ப்போர் வாங்கி செல்கின்றனர் என அவர்கள் கூறினர்.




தற்போதைய செய்திகள்