width:600px height:413px செய்திகள்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை




உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கா.காளிமுத்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது : திருமயம் வட்டாரத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் அதிகளவில் மஞ்சள் தேமல் நோய் காணப்படுகிறது. இந்நோயானது வெள்ளை ஈ மற்றும் தத்து பூச்சிகள் மூலம் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது. இந்நோய் தாக்கிய செடிகள் யாவும் உயரம் குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாக சுருண்டும், கணுக்கள் கருகியும் காணப்படும். ஆகவே இந்நோய் பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்ப நிலையிலே பிடிங்கி அழித்து விடவேண்டும்.

இந்நோய் வராமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இரகங்களான வம்பன்-6,8 ஆகிய இரகங்களை பயிரிடலாம். மேலும் ஒரு கிலோ விதைக்கு 5 மிலி வீதம் டைமித்தோயேட் அல்லது இமிடாகுளோபிரைடு மருந்தினை கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

வளர்த்த பயிரில் ஒரு ஏக்கருக்கு 5 எண்கள் மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம் அல்லது டைமித்தோயேட் 30நுஊ-200மிலிஇ (அ) மோனோகுரோடோபாஸ் 36ளுடு-300மிலி (அ) தைமித்தோக்ஸோம் 20றுபு-60கிராம் உடன்-200லி தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஆலோசனை வழங்கியுள்ளார்.

 




தற்போதைய செய்திகள்