நாமக்கல் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், கோழிக்குஞ்சுகள் வினியோகம் துவக்கப்பட்டது. தமிழக அரசின் கோழிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 4,494 பெண் பயனாளிகளுக்கு தலா, 25 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வீதம், நாமக்கல் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வழங்கும் பணி துவக்கப்பட்டது.
நாமக்கல்லில் நடந்த துவக்க விழாவில் பாஸ்கர், எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இப்பணி வருகின்ற 15ம் தேதி வரை, அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும். மொத்தம் ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 350 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வேல்முருகன், கால்நடை மருத்துவர் ராஜேந்திரன், உதவி மருத்துவர்கள் வெள்ளைச்சாமி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
