பக்ரீத் பண்டிகை வருவதால், 10 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு விலை, ரூ.7,500 வரை விற்பனையாகிறது.கரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் முதல், ஆட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
சந்தைகள் செயல்படாததால், சென்னை உள்பட அனைத்து நகர வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள், கிராமங்களுக்கே சென்று, ஆடுகளை கொள்முதல் செய்கின்றனர். ஆடுகளை பொறுத்தமட்டில், வெள்ளாடு விலை உயர்ந்திருப்பது வாடிக்கை.
ஆனால், வருகின்ற 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இஸ்லாமிய மக்கள் குர்பானி கொடுக்க, செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர். அதற்கேற்ப, வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள், வெள்ளாடுகளை நிறுத்திவிட்டு, செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால், அதன் விலை, ரூ1,000 வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, ரூ.5,100 முதல் 6,000 வரை விற்பனையான நிலையில், தற்போது, ரூ.6,000 முதல் 7,500 வரை விற்பனையாகிறது. வெள்ளாடுகளின் விலையில், எந்த மாற்றமின்றி, 10 கிலோ, ரூ.6,500 முதல் 7,000 வரை விற்பனையாகிறது
