ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர்ப் பாசனம், அதாவது சொட்டு நீர் பாசனம் , தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் அமைக்கும் விவசாயிகள் நுண்ணீர்பாசன மானியத்துடன் கூடுதலாக துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்திலும் மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான குறுவட்டங்களாகிய சிவகிரி பு+ந்துறை, கோபிசெட்டிபாளையம், கூகலூர், வாணிப்புத்தூர், பர்கூர் மற்றும் குதியாலத்தூர் குறுவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைத்து 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25,000ஃ- வரை பெறலாம்.
அனைத்து வட்டாரங்களிலும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டார் ஃ டீசல் பம்புசெட் நிறுவும் விவசாயிகள் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15,000ஃ- வரை பெறலாம். நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் பதிக்க அதிகபட்ச மானியம் ரூ.10,000ஃ- வரை பெறலாம். 114 கன மீட்டர் அளவுள்ள நீர் தேக்கத்தொட்டி அமைத்திட அதிகபட்சமாக ரூ.40,000ஃ- வரை மானியம் பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தில் இணையுமாறும், மேலும் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளுமாறும் வேளாண்மை இணை இயக்குநர் சின்னச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
