width:285px height:177px செய்திகள்

மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்




பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், நடப்பாண்டில் விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத்தூவான் அமைக்க, 375 ஹெக்டேருக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் பெறலாம்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்து வருகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில், பாசன குழாய்கள் கொள்முதல் செய்ய அதிகபட்சம், ரூ.10,000, மின் மோட்டார் அல்லது டீசல் பம்ப்செட் அமைக்க அதிகபட்சம், ரூ.15,000, பாதுகாக்கப்பட்ட வேலிக்குட்பட்ட தரை நிலை நீர் தேக்கத் தொட்டி அல்லது செங்கல் கட்டுமானத்தில் அமைத்து கொள்ள, ரூ.40,000 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்