width:615px height:350px செய்திகள்

ராட்சத யானை திருக்கை மீன் வலையில் சிக்கியது




கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இங்குள்ள விசைப்படகுகள் அனைத்து அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வாடிக்கையாகும். தற்போது கரோனா ஊரடங்கால் விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்று வருகின்றன.

இந்நிலையில், விசைப்படகில் பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு பெரிய மற்றும் சிறிய மீன்கள் என தரம் பிரித்து தனித்தனி ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகள், தொழிலாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, ஊரடங்கு காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகை இல்லாதால், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்கிறார்கள்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்ற விசைப்படகுகள் இரவு 9 மணிக்கு ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கு திரும்பின. அதில் ஒரு விசைப்படகில் 3 டன் எடை கொண்ட ராட்சத யானை திருக்கை மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த மீன் கயிறுகள் மூலம் கட்டி துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்