width:830px height:470px செய்திகள்

வாழைக்கு காப்பீடு செய்ய தோட்டக்லைத்துறை அழைப்பு




கண்டமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கண்டமங்கலம் வட்டார உதவி இயக்குனர் ஜெய்சன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிரான வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக ஒரு எக்டேருக்கு ரூ.4,380 காப்பீட்டு தொகையினை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை பயிர் இயற்கை சீற்றங்களால் பாதிக்கும் பட்சத்தில் ஒரு எக்டேருக்கு ரூ.87,809 இழப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்டமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்