width:420px height:228px இயற்கை உரம்

அமிர்தகரைசல் தயாரிக்கும் முறை




அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள்.தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள் :

நாட்டுப்பசு சாணம் - 10 கிலோ

நாட்டுப்பசு கோமியம் - 10 லிட்டர்

கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் - 250 கிராம்

தண்ணீர் - 200 லிட்டர்


 தயாரிக்கும் முறை : முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசு சாணம் புதியதாக இருத்தல் அவசியம், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.



பயன்படுத்தும் அளவு : ஒரு லிட்டர் அமிர்தகரைசலை, 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். மேலும் இதை வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

இந்த கரைசலை மூன்று நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்மைகள் : இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம்.

தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.





Could not connect to MySQL