width:848px height:477px செய்திகள்

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!




திண்டுக்கல் மாவட்டத்தில் 3957 ஏக்கரில் மல்பெரி சாகுபடியாகிறது. 1776 விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் 20 டன் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு பல வகையில் மானியம் வழங்குகிறது.

அதன்படி மல்பெரி நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10,500 தனி புழு வளர்ப்பு மனை நிலை ஒன்னு காண திட்டத்தில் 1500 சதுர அடிக்கு மேல் ரூ.2.75 லட்சம் அலகு மதிப்பில் ரூ.82 ஆயிரம் மனை மானியம் வழங்கப்படுகிறது. மனநிலை 2 திட்டத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் ரூ.1.75 லட்சத்தில் ரூ.87 ஆயிரத்து 500, மனநிலை 3 திட்டத்தில் 700 சதுர அடிக்கு மேல் ரூ.90 ஆயிரத்தில் ரூ.63 ஆயிரம் மானியம் உண்டு.

இலவச புழு வளர்ப்புத் தளவாடங்கள் திட்டத்தில் ரூபாய் 70 ஆயிரத்தில் 1200 சதுர அடிக்கு மேல் புழு வளர்ப்பு படுக்கை தாங்கிகள் அமைக்க ரூ.52 ஆயிரத்து 500, 5 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்கச் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 600, இதர விவசாயிகளுக்குத் துபாய் 26 ஆயிரத்து 100 மானியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கரில் 800 முட்டை தொகுதிகள் வளர்த்து 100 முட்டை தொகுதிகளுக்கு 80 கிலோ பட்டுக்கூடு அறுவடை செய்யும் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 25000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படுகிறது என உதவி இயக்குனர் மேகலா தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்