width:1200px height:628px மலைத்தோட்டப் பயிர்கள்

வெள்ளைப்பூண்டு சாகுபடி




இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இரகங்கள்

ஊட்டி 1, சிங்கப்பூர் ரெட், மதராசி, ஆகிய பூண்டு இரகங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் பார்வி, இராஜேயே, காடி மற்றும் யமுனா சபேத்-1, யமுனா சபேத்-2, யமுனா சபேத்-3, யமுனா சபேத்-4, அக்ரிபவுண்ட் ஒயிட் ஆகிய இரகங்களும் உள்ளன.

பருவம்

ஜீன் - ஜீலை, அக்டோபர் - நவம்பர் மாதங்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும். குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்கள் சிறந்தவை.

மண்

வளமான வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5 முதல் 6 வரை இருக்க வேண்டும்.

 

நிலத்தை குறுக்கும், நெடுக்குமாக உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 30 டன் தொழுஉரம், 500 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்ற உரக்கலவைகளை அடியுரமாக இடவேண்டும். பின் 1மீ அகலமும், 15 செ.மீ. உயரமும், தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதையளவு

விதைப்பூண்டிலிருந்து 8 முதல் 10 மிமீ விட்டம் மற்றும் 4 கிராமிற்கும் அதிகமான எடை கொண்ட பூண்டு பற்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு நடவு செய்ய சுமார் 500 முதல் 600 கிலோ பூண்டு பற்கள் தேவைப்படும்.

விதைநேர்த்தி

நடுவதற்கு முன்பு முதலில் பூண்டுகளை நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். அதன் பின் அமிர்தக் கரைசலில் விதைப்பற்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்திய பிறகு நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்

விதைப்பற்களை பாருக்கு பாராக 15 செ.மீ இடைவெளியிலும், விதைக்கு விதை 10 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடும் பொழுது நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பூண்டின் வளர்ச்சி காலத்தில் 7 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறையும், முதிர்ச்சியடையும் போது 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் நிலத்தில் அதிகப்படியான நீர் இருந்தால் கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL