width:1200px height:628px கால்நடை

வெள்ளாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும் அப்படி என்ன வேறுபாடுகள் இருக்கு?




வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்.

செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது

வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது

வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்

வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்

செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன

இனப் பெருக்கமும்

வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.

நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.

பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும்.

எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.




தற்போதைய செய்திகள்