width:1200px height:628px செய்திகள்

பாசனத்திற்கு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு




தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர், ஆக மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு 04.06.2021 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 & 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு 04.06.2021 முதல் 28.02.2022 வரை வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு பொதுப்பணித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL