width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

நோய் தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு




திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஒவ்வொரு சீசனிலும் பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தக்காளி, பச்சை மிளகாய், கத்தரி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றி விளைவிக்கப்படுகிறது.

தற்போது குழித்தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்கின்றனர். பயிர் பாதுகாப்பு, செடிகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பினை பொறுத்து விளைச்சலுக்கு வாய்ப்புள்ளது.

ஆனால் தற்போது பராமரிப்பிலுள்ள செடிகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல்வேறு நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. நோய்த் தாக்குதலால் வளர்ச்சி தருணத்தில் இலைகள் சுருண்டு விடுவதால் விளைச்சல் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் உள்ளூரிலேயே விற்பனை செய்ய துவங்கியுள்ளோம். கோடை வெயில் காரணமாக செடிகளில் பரவும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம் என்றனர்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL