width:1200px height:628px செய்திகள்

செடியில் பழுத்து வெடிக்கும் தர்பூசணி




ஈரோடு மாவட்டம், பவானி அருகே தொட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில், சில மாதங்களுக்கு முன் தர்பூசணியை பயிரிட்டார். அவை தற்போது அறுவடை தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூருக்கும் அனுப்ப முடியவில்லை. சாலையோரம் கடை போடவும் தடை உள்ளதால், அந்த வியாபாரிகளும் வரவில்லை. அறுவடை காலமும் முடிந்த நிலையில், தோட்டத்தில் பழுத்து, வெடித்து வீணாக தொடங்கியுள்ளது.

இது குறித்து விவசாயி கவலையுடன் கூறியதாவது : ஊரடங்குக்கு முன் ஒரு காய், ரூ.13க்கு விற்பனையானது. தற்போது கேட்கவே ஆளில்லை. ஊரடங்கால் மொத்தமாக நஷ்டமாகி விட்டது என கூறினார்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL