width:px height:px மேலாண்மை செய்திகள்

பாசன நீர் குறைந்த பகுதியில் மாற்றுப் பயிராக பப்பாளி




மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், பாசன நீர் குறைந்த பகுதியில் மாற்றுப் பயிராக பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், சில நேரங்களில், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, பாசனநீர் குறைவாக உள்ள புதிய ஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளி கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். உழவு செய்து கன்றுகள் நடவு செய்வதில் தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்ப்பது வரை, சுமார் ரூ.60,000 வரை செலவாகிறது. பத்து மாதத்திலிருந்து பப்பாளி பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 25 மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடிக்கு குறைந்த அளவு பாசன நீர் போதுமானதாகும். அதிக தொழிலாளர்களும் தேவைப்படுவதில்லை. பப்பாளி பழங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளதால், போதிய விலையும் கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பப்பாளி பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL