width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

அடர் நடவில் கொய்யா சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்




விவசாயிகள் பலர், கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, தளி அடுத்த சுற்றுப்பகுதி கிராமங்களின் சில பகுதிகளில் அடர் நடவு முறையில் கொய்யா நடவு செய்யப்படுகிறது. அதாவது, 3 மீ., இடைவெளியில் இதன் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது : அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிக்கு ஆட்களின் தேவை குறைகிறது. வரிசைகளுக்கு இடையே ஊடு பயிராக உளுந்து மற்றும் காய்கறிகளும் சாகுபடி செய்யலாம். நடவு செய்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்தால், கூடுதல் மகசூல் கிடைக்கும். அதாவது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு, 2 முறை கவாத்து செய்யப்படும். நடவு செய்து, 5 மாதங்கள் கழித்து பூக்கத்தொடங்கும் போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும். பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால் தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். குறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என அவர்கள் கூறினர்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL