width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்




கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கேரளாவின் உணவுத் தேவை தவிர, ஜவ்வரிசி தயாரிப்பு, ஆடை நிறுவனங்களில் துணிகளுக்கு கஞ்சி தயாரிப்பு, மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள் தயாரிப்பு என, மரவள்ளி கிழங்குக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ஓரளவு நிலையான விலையும் கிடைப்பதால், பொள்ளாச்சி பகுதியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. ஓராண்டு பயிரான மரவள்ளியில், அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மாவுப்பூச்சி தாக்குதலாகும். பிற மாவட்டங்களில் இப்பூச்சியின் தாக்கம் அதிகம் உள்ளது. இதை அறிந்த தோட்டக்கலை துறை, அதை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து பொள்ளாச்சி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வசுமதி கூறுகையில், மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரின், நுனி குருத்தை அகற்ற வேண்டும். நடவின்போது, குளோரோபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மி.லி., அளவில் கலந்து, அதில் விதைக் கரணைகளை, 15 நிமிடம் ஊற வைத்த பின் நடவு செய்ய வேண்டும். மாவுப்பூச்சி தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது, அசாடிராக்டின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மி.லி., வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால், தையோமித்தாக்சைம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மி.லி., அல்லது அபாமெக்டின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 மி.லி., வீதம் கலந்து தெளிக்க வேண்டும். குறிப்பாக, பூச்சி மருந்து தெளிக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பானை பயன்படுத்தி, காலை அல்லது மாலை வேளையில் மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாவுப் பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி கிழங்கு பயிரை பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL