width:1200px height:628px செய்திகள்

உதிரும் கோழிக்கொண்டை பூக்கள்




சிங்கம்புணரி அருகே விளைந்த கோழிக்கொண்டை பூக்கள் ஊரடங்கு காரணமாக பறிக்கப்படாமல் செடியிலேயே பூத்து உதிர்கின்றன.

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் பலர் கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக மதகுபட்டியில் பூ கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பூக்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். விளையும் பூக்களை வெளியே விற்பனை செய்யாமல் தாங்கள் தயாரிக்கும் மாலைகளுக்கு பயன்படுத்தி கொள்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்குச் சென்று பூ, மாலை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் கோழிக்கொண்டை பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். அவை பூத்து வயலிலேயே உதிர்கின்றன.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், சித்திரையில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி கோழிக்கொண்டை பூக்களை பயிரிட்டோம். எதிர்பாராத விதமாக கொரோனா பரவல் ஏற்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பூ, மாலைகளை விற்பனை செய்ய முடியவில்லை. வேறு வழி இல்லாமல் விளைந்த பூக்களை பறிக்காமல் விட்டு விட்டோம். தற்போது சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் பூ கட்டும் தொழிலை தொடங்க உள்ளோம், என்றார்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL