width:px height:px மேலாண்மை செய்திகள்

அதிக மகசூல் பெற செய்வீர் மண் பரிசோதனை




இக்கோடை காலத்தில் விவசாயிகள் ஆகிய நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி மண் மாதிரி எடுத்தல் ஆகும்.

மண் பரிசோதனையின் அவசியம் பற்றி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் லீமாரோஸ் கூறியதாவது : மண்ணில் உள்ள சத்துகள் மற்றும் மண்ணில் உள்ள பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு மண் பரிசோதனை மிகவும் அவசியம்.
மண் மாதிரிகள் எங்கெல்லாம் எடுக்கக் கூடாது என்றால் குப்பை கொட்டிய இடம், நிழல் படும் இடம், வரப்பு ஓரங்கள், நீர்க்கசிவு உள்ள இடங்கள் ஆகும்.
பயிர் இல்லாத காலங்களில் மாதிரிகளை குறைந்தது 10 இடங்களில் இருந்து ஆங்கில எழுத்து வி என்ற வடிவில் அரை முதல் முக்கால் அடிக்கு மண்வெட்டியால் தோண்டி சரிவான பக்கங்களிலிருந்து மண் சேகரம் செய்ய வேண்டும். 10 இடங்களில் சேகரித்த மண் மாதிரியிணை கால் பங்கீட்டு முறையின்படி அரை கிலோவாக குறைத்து ஒரு துணிப்பையில் கட்டி பெயர், முகவரி, சர்வே எண், சாகுபடி செய்யப்போகும் பயிர் போன்ற விபரங்களை எழுதி மண் மாதிரியுடன் சேர்த்து ரூபாய் 20 கட்டணத்துடன் நடமாடும் மண் பரிசோதனை நிலையம், அருப்புக்கோட்டையில் சேர்க்க வேண்டும். கால் பங்கீட்டு முறை என்றால் சேகரித்த மண்ணை ஒரு காகிதத்தில் அல்லது தார்பாயில் கொட்டி சமப்படுத்தவும். பின்னர் கூட்டல் அடையாளம் போட்டு, 4 பிரிவாக பிரிக்க வேண்டும். அதில், எதிர் எதிரே உள்ள மண்ணை நீக்க வேண்டும். பின்னர் மண்ணை ஒன்றாக குவியல் ஆக்கி, பின்னர் சமப்படுத்தி 4 பங்காக பிரித்து எதிர் எதிரே உள்ள மண்ணை நீக்க வேண்டும். இவ்வாறு திரும்ப திரும்ப செய்து அரை கிலோ மண் கிடைக்கும் வரை செய்யவும். மண் மாதிரியிணை ஆய்வகத்தில் கொடுத்து பரிசோதனை செய்து உரிய உர பரிந்துரை பெற்று, அதிக மகசூல் பெற வேளாண்மை உதவி இயக்குனர் லீமாரோஸ், விவசாயிகளை கேட்டுக் கொள்கிறார்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL