மீன் அமிலம் தொடர்ந்து தெளிப்பது மூலமாக பெரிய மற்றும் கரும்பச்சை நிறமான இலைகள் பெறலாம். வளர்ச்சி ஊக்கிகளை தொடர்ந்து பயிருக்கு அளித்தால் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும்.
மண்புழு உரத்தை நீரில் கரைத்து நன்கு வடிகட்டி சொட்டுநீர் பாசனம் மூலம் அளிக்கலாம் .கோழி உரத்தை நன்கு மக்க வைத்து அளி க்கலாம். இதனால் செடி சீக்கிரமாக வளரும்.
மிளகாய் செடியில் இலைகள் சுருண்டு கொண்டு காணப்படுகிறது இதற்கு என்ன செய்யலாம்
மிளகாயில் தொடர் பணி, மழைக்காலங்களில் இந்த நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த நோய் வெள்ளை ஈ மூலம் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த நிலத்தில் தண்ணீர் தேங்க விடக்கூடாது .மேலும் மூலிகை பூச்சி விரட்டியை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
