width:668px height:443px காய்கறிகள்

கேரட் சாகுபடி...




கேரட் ஆரஞ்சு நிறத்தில், நீளமான கூம்பு வடிவில், கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும்.

கேரட் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

குளிர் பிரதேசப்பகுதிகளின் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது கிழங்குகள் நல்ல ஆரஞ்ச் நிறத்துடன் இருக்கும்.

கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகளில் கேரட் பயிரிடலாம்.

தமிழகத்தில் கேரட் பயிரிடுவதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள் மிகவும் ஏற்றது.

 

இரகங்கள்

மலைப்பகுதி: ஊட்டி -1, நேன்டிஸ், நியூ கொரடா

சமவெளிப்பகுதி: இந்தியா கோல்டு, பூசா கேசர், ஹாப் லாங் டான்வெர்ஸ்

மண்: கேரட் ஒரு குளிர்காலப் பயிராகும். 15 செ. முதல் 20 செ. வெப்பநிலையில் நன்கு வளரும். கேரட்டிற்கு அதிக ஆழமுள்ள தளர்ந்த வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6 முதல் 7 ஆக இருக்க வேண்டும்.

பருவம்

மலைப்பகுதி

கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில், பாசனம் நிலையான இருந்தால் கேரட்டைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்தில் இருந்தால், கேரட்டை ஜீலை-பிப்ரவரி மாதத்தில் பயிரிடலாம்.

விதையளவு 4 கிலோ/எக்டர்

இடைவெளி

25-30 செ.மீ. இடைவெளியில் வரிசை அமைக்க வேண்டும்

விதைகளை மணலுடன் கலந்து (ஒரு பாக விதையை 4 பாக மணலுடன் கலக்க வேண்டும்) விதைக்க வேண்டும்

செடிகளைக் குறைத்தல்

மலைப்பகுதி: செடிகளுக்கு நடுவில் 10 செ.மீ.

சமவெளிப்பகுதி: செடிகளுக்கு நடுவில் 5 செ.மீ. இடைவெளி விட வேண்டும். நிலத்தைத் தயார் செய்தல்

மலைப்பகுதி: நிலத்தை பண்பட உழவேண்டும். 15 செ.மீ. உயரத்திற்கு விதைப்படுக்கையை அமைக்க வேண்டும். 1 மீ அகலமும், வேண்டிய அளவு நிலத்துடன் அமைக்க வேண்டும்

சமவெளிப்பகுதி: 2 உழவு செய்ய வேண்டும். 30 செ.மீ. இடைவெளியில் வரிசை அமைக்க வேண்டும்

 

விதை நேர்த்தி

மாட்டு உரக் கழிவுகளை 3 கிராம்/லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்

டிரைக்கோடெர்மா விரிடியை 5% எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்

நாற்றுக்களின் வேர் நுனிகளை நடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் 5% ல் நனைத்து நடவு செய்ய வேண்டும்

பாசனம்

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வறட்சிக் காலங்களில், மாலை வேளைகளில் பாசனம் செய்தவுடன், விதைப்படுக்ககைகளை ஈரமான சாக்கு பைகளைக் கொண்டு மூட வேண்டும். இதனால் விதை முளைப்பும் அதிகமாகும்.

 

உரமிடுதல்

பயிரிட்டபின் மேற்கொள்ளப்படும் முறைகள்

விதைத்து 15 நாட்களுக்குப் பிறகு முதல் களை எடுக்க வேண்டும். விதைத்த 30 வது நாளில் செடிகளைக் குறைத்தல் மற்றும் மண் அணைக்க வேண்டும்.

 

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

கேரட்டில் அதிகளவு பூச்சித் தாக்குதல் இருக்காது. வேர் முடிச்சு நூற்புழுக்கள்

வேப்பங்கட்டியை 1 டன்/எக்டர் என்ற அளவில் விதைக்கும் சமயத்தில் அளிப்பதால், மெலாடிகைன் வகை நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்

3 வருடத்திற்கு ஒரு முறை கேரட் பயிரிடுமாறு பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்

துலக்கமல்லி செடியை 2 வருடத்திற்கு முறை பயிரிட வேண்டும்

பேசிலோமைசிஸ் லிலாசினைஸ் 10 கிலோ/எக்டர் என்ற அளிவல் எடுத்து விதைப்பதற்கு முன் அளிக்க வேண்டும்

 

நோய்கள்

இலைப்புள்ளி நோய்

5% மஞ்சுரியன் தேயிலைச் சாற்றை மூன்று முறை விதைத்த ஒரு மாதம் கழித்து ஒரு மாத இடைவெளியில் தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

3% தசகவ்யாவை விதைத்த ஒரு மாதத்திலிருந்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

மண் வழியே பரவும் நோய்கள்

டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ/எக்டர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்

சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ்5 கிலோ/ எக்டர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்

மகசூல்: 100-120 நாட்களில் 25-30 டன்/எக்டர் என்ற அளவில் மகசூல் கிடைக்கும்




தற்போதைய செய்திகள்