முள்ளங்கி மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கி பயிர் செய்யப்படுகிறது.
முள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி, வெப்பம் குறைந்த குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
முள்ளங்கி காய்கறி பயிர் அனைத்து தரப்பு மண்வகையிலும் விரைந்து வளர்க்கக்கூடிய ஒரு காய்கறி பயிராகும். முள்ளங்கி சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். முள்ளங்கி ஒரு மருத்துவ குணம் நிறைந்த காய்கறியாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் காணப்படும் பில்லுரிமின் அளவை குறைத்து மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்தும். பித்த சுரப்பி ரத்தத்தில் கலப்பதை தடை செய்கிறது.
முள்ளங்கியின் இலை பொரியலாக செய்து உணவு பண்டங்கள் தயாரிக்கலாம். முள்ளங்கியில் நார்சத்து அதிகமாக உள்ளதால், மல இளக்கியாகவும் பயன்படுகிறது. முக்கியமாக மூலநோய் பாதிக்கப்பட்ட நபருக்கு முள்ளங்கி சிறந்த மருந்தாகவும், மூலநோயின் தாக்குதலை கட்டுப்படுத்தி ஜீரண சக்தியை அதிகப்படுத்தி மலச்சிக்கலை போக்கி நல்ல நிவாரணம் தருகிறது. மனித உடலில் கேன்சர் போன்ற நோய்கள் தாக்காத வண்ணம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இந்நோயின் தாக்குதலை குறைக்கிறது.
காலநிலை
முள்ளங்கி, வெப்பம் மற்றும் மித வெப்பம் பகுதிகளில் நன்கு வளரும். இது வேகமாக வளரக்கூடிய ஒரு பயிராகும். சுமார் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். அதிகமாக பூச்சி நோய்கள் தாக்குதல் காணப்படுவதில்லை. எனவே இதன் மகசூல் அதிக லாபம் தரும்.
முள்ளங்கியில் நீண்ட முக்கோண வடிவம் கொண்ட வகையும், உருண்டை வடிவில் கிழங்குகள் உருவாகும் வகையிலும் உள்ளது. 30 செ.மீ. வரை நீளம் கொண்டதாகும். பியுசா டேசாய், பியுசா ரஸ்மி, பியுசா கியுமின், கலியானி வெள்ளை போன்ற ரகங்கள் அதிக மகசூல் வரும். காலநிலை வெப்பம் 10 முதல் 30 சென்டி கிரேடு வரை வளரக்கூடியது.
மண்வகை
நல்ல வடிகால் உள்ள இழகிய மண் மிகவும் சிறந்தது. 6 முதல் 8 இன்ச் வரை இழகிய மண் இருக்கமாறு பார்த்து கொள்ள வேண்டும். அடியுறாக பண்ணைக்கழிவு உரம், தொழு உரம் இட வேண்டும்.
மண்ணை பூஞ்சாண தாக்குதலில் இருந்து பாதுகாக்க தூய்மைப்படுத்த வேண்டும். பயிர் செய்யப்படும் நிலத்தை, ஒளி ஊடுருவி செல்லும் பாலித்தீன் தாள் மூடி வைப்பதால், சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் வெப்பம் மண்ணில் ஈர்க்கப்பட்டு வெளியில் செல்லாமல் வெப்பம் அதிகம் ஆவதால் பூஞ்சாண விதைகள் அழிக்கப்பட்டு முள்ளங்கி பயிரை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கப்படும்.
நாற்றுகள் தயாரித்தல்
மேட்டு பாத்தி அமைத்து விதைகளை ஒரு பங்குக்கு 4 பங்கு மணல் என்ற அளவில் சரியாக தூவி நாற்றங்களை செழிப்பாக உருவாக்கலாம். 10 முதல் 12 கிலோ வித்துகளை ஒரு ஹெக்டர் சாகுபடி செய்ய பயன்படுத்த வேண்டும். விதைகளை நப்பதாலின் அசிடிக் அமிலத்தை 10-20 பி.பி.எம். என்ற அளவில் கலந்து அதில் முள்ளங்கி விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
மேட்டு திண்டு பாத்திகளை வரிசையாக அமைத்து மேட்டு திண்டு பாத்திகளில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 10 செ.மீ. அளவிலும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ. அளவிலும் நடவு செய்ய வேண்டும்.
நீர்பாசனம் - உரமிடும் முறை
நட்டு நான்கு தினங்களுக்கு தினமும் நீர்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
தொழு உரம் எக்டருக்கு 25 முதல் 40 டன் வரை இட வேண்டும். தழை உரம் 18 முதல் 50 கிலோ வரை, அம்மோனியம் சல்பைட் உர வடிவில் இட வேண்டும். 50 கிலோ பெட்டாஷ் சத்து, முரியட் ஆப் பொட்டாஷ் வடிவில் இட வேண்டும். தழைசத்து உரத்தை பாதி பங்கினை அடியுரமாகவும், பின்பு 30 நாட்கள் கழித்து அரை பங்கு உரத்தை மேலுரமாகவும் இட வேண்டும்.
களைகளை கட்டுப்படுத்த நைட்டோபென் 25 சதம் மருந்துகளை தெளித்து களை விதைகளை முளைக்காமல் இருக்க செய்யலாம். வேகமாக வளரக்கூடிய முள்ளங்கி, வேகமாக வளர்ந்து கிழங்குகள் மண்ணின் மேல்பாகத்தில் தடித்து வளரும். தேவைக்கேற்ப இளம் முள்ளங்கிகளை அறுவடை செய்யலாம்.
முக்கியமாக முள்ளங்கி பயிர்களை இலை புழுக்கள் தாக்கக்கூடும். இதனை கட்டுப்படுத்த வேம்பம் கொட்டைசாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
கேள்வி பதில்கள்
சமவெளிப் பகுதிகளுக்கு உகந்த முள்ளங்கி இரகங்கள் யாவை?
கோ-1, பூசா ராஸ்மி, பூசா செட்கி, பூசா தேசி, ஜேப்பனீஸ் ஒயிட் மற்றும்அர்கா நிஷாந்
முள்ளங்கியினை வெட்டிப் பார்க்கும் பொழுது அதனின் மத்தியப் பகுதியானது பஞ்சுயானது பஞ்சுபோன்று கடினமான பகுதிகாணப்படுகின்றது அது ஏன்?
எனவே. சரியான தருனத்தில் அறுவடையினை செய்ய வேண்டும் காலம் கடந்து தாழ்த்தி அறுவடை செய்வதன் மூலம் இவ்வாறு ஏற்படுகின்றது.
முள்ளங்கியில் ஏற்படும் ஒரு வகையான நறுமணம் என்ன காரணம்?
ஐசோ தையோசைனேட் என்னும் வேதிப் பொருளேயாகும்
