width:960px height:540px காய்கறிகள்

கத்தரிக்காய் சாகுபடி




கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்விகமாக கொண்டது. கருநீலம், இளம்பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீல் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகை கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என் முற்றாத அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன.

 

ரகங்கள்:

கோ.1 , கோ.2 , MTU 1 , PKM 1 , PLR 1 , KKM 1 , அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா ஆனந்த் ஆகிய ரகங்கள் அன்றாட காய் உற்பத்திக்கு பயிரிடப்படும் ரகங்கள் ஆகும்.

 

பயிரிடும் முறை:

மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் கத்தரிக்காய் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற காலங்கள் ஆகும், இக்காலங்களில் பயிரிடும்போது நாம் நல்ல மகசூலை பெறலாம்.

செம்மண் மற்றும் வண்டல் மண் கத்தரிக்காய் சாகுபடிக்கு சிறந்த மண் ஆகும்.

ஒரு ஹெக்டர்க்கு 400 கிராம் விதைகள் தேவைப்படும்.

நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுக்கு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் 10 செ.மீ இடைவெளிகளில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போடு அதில் விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு வயலை நன்கு உழுது அதில் 15 டன் தொழு உரம் போட்டு தயார்படுத்த வேண்டும்.

நடவு வயலில் பாத்திகளை போட்டு அதில் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 25 முதல் 30 நாட்களான நாற்றை நடவேண்டும்.

நடவு செய்த மூன்றாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

பாதுகாப்பு முறைகள்:

நாற்றுகளை நடுவதற்கு முன்பு களை கொல்லி மருந்தை தூவ வேண்டும், இது அதிக அளவில் களைகள் வராமல் தடுக்கும். பின்பு நன்கு வேர் பற்றியவுடன் களை இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

பாதிக்கப்பட்ட வேர் அல்லது காய்களை கிள்ளி எறிந்துவிட வேண்டும். இதனால் மற்ற காய்கள் பாதிப்பிலிருந்து தடுக்கலாம். அதிக அளவு பாதிக்கப்பட்டால் 50 மில்லி வேப்பங்கொட்டைச்சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை ஆரம்பிக்கும். காய்களை பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். 4 – 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.




Site For Sale Contact : 9894832938