width:261px height:193px கீரைகள்

வெந்தயக்கீரை சாகுபடி




வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது.

இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தந்துவிடும்.

கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும்.

சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.

வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது.

உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பருவம்

சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஏற்றவை.

மண்

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள், செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தது.

விதையளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

கீரை விதைகளை மணல் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின் மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும்.

உரங்கள்

7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதன் மூலம் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

விதைகள் விதைத்த 6-ம் நாளில் முளைவிடும். பத்து நாட்கள் கழித்து களைகளை நீக்கி விட வேண்டும். அப்பொழுது அதிகப்படியான செடிகளை களைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.

அறுவடை

விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறித்து விற்பனை செய்ய வேண்டும்.




தற்போதைய செய்திகள்