உரிய ஆலோசனைகளுடன் நேர்த்தியான முறையில் எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா ஆகியவற்றை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ரோஜா சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறுமண் நிலம் சிறந்ததாகும்.
நடவு முறை
45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. என்ற அளவுள்ள குழிகளை 2 மீட்டருக்கு ஒரு மீட்டர் இடைவெளியில் தயாரிக்க வேண்டும். குழிக்கு 10 கிலோ சாண எரு, 20 கிராம் லின்டேன் ஆகியவற்றை கலந்து இடவேண்டும்.
நீர்ப் பாசனம்
செடிகள் வேர் பிடிக்கும் வரை 2 நாள்களுக்கு ஒரு முறையும், அதன் பின் வாரம் ஒரு முறையும் முழுமையாக நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
கவாத்து செய்தல்
அந்தந்த பருவத்துக்கேற்ப முன் பருவக் கிளைகளை பாதி அளவில் இருக்குமாறு வெட்டி விட வேண்டும். அனைத்து நலிவுற்ற நோய்த் தாக்கப்பட்ட, குறுக்கு நெடுக்காக வளர்ந்துள்ள பலன் தராத கிளைகளை அகற்றி, வெட்டிய முனைகளில் பைட்டலான் கலவையுடன் கார்பரில் நனையும் தூள் கொண்டு தடவ வேண்டும்.
உரமிடுதல்
(செடி ஒன்றுக்கு) சாண எரு 10 கிலோ, 6:12:12 கிராம் அளவில் தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட உரத்தை கவாத்து செய்து அந்தந்த பருவத்துக்கேற்ப இடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
செடியில் வண்டுகள் வந்தால், எண்டோசல்பான் 35-ஐ, 2 மில்லி லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். ஒளி விளக்குகள் வைத்து இந்த வண்டுகளை கவர்ந்து பின் அழிக்கலாம்.
சிவப்பு செதில் பூச்சிகள்
பூச்சி தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மீன் எண்ணெய், சோப்பு 25 கிராம் அளவை ஒரு நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
(அசுவினி இலைப் பேன்கள், தத்துப் பூச்சிகள்) வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது கார்போப்யூரான் 3ஜி, குருணை ஆகியவற்றை செடிக்கு 5 கிராம் இடவேண்டும்.
சாம்பல் நோய்
நனையும் கந்தகம் 2 கிராம் அல்லது கார்பென்டெசிம் 1 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இந்த முறையில் சாகுபடி செய்தால் நடவு செய்த முதல் வருடம் பூக்கத் தொடங்கி விடும். ஒரு ஹெக்டேருக்கு, ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் பூக்கள் கிடைக்கும்.
