தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் மற்றும் சிநேசிஸ்பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.
தமிழகத்தில் நீலகரி, திண்டுக்கல் , மாவட்டத்தில் ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது.
அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளிலும், நீர்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்த பகுதிகளிலும் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம்.
நிலத்தை நன்கு உழுத பின்பு 7 மிட்டர் இடைவெளியல் 75 செ.மீ நிளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் தொழு உரம் 2 கிலோவுடன் மேல்மண் கலந்து ஒரு வாரம் ஆறவிட வேண்டும்.
குருத்து ஒட்டு செய்த செடிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது.
நடவுக்கு தேர்வு செய்த ஓட்டுச் செடிகளை தயார் செய்துள்ள குழிகளில் மத்தியில் நடவு செய்ய வேண்டும். அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, செடியைவும் குச்சியையும் பிணைத்து கட்ட வேண்டும்.
நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். செடியின் அருகில் தண்ணிர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஆண்டு ஒன்றிற்கு 10 கிலோ தொழுஉரம் இட வேண்டும். ஆறாம் ஆண்டு முதல் 30 கிலோ இட வேண்டும். தழைச்சத்து கொடுக்க கூடிய உரங்களை இரண்டாகப் பிரித்து மார்ச் மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் இட வேண்டும். தொழு உரம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அக்டோபர் மாதத்தில் இடவேண்டும்.
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். காய்ந்த தண்டுகள், பக்க கிளைகளை அவ்வப்போது நீக்கி பராமரிக்க வேண்டும்.
5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு எக்டருக்கு 30 டன் பழங்கள் வரை மகசூல் கிடைக்கும்.
