width:266px height:189px மேலாண்மை செய்திகள்

தென்னையில் பயிர் பாதுகாப்பு விவசாயிகள் வலியுறுத்தல்




விவசாயம் பரவலாக நடந்து வருகிறது.இந்நிலையில், தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களால், மகசூல் பாதிப்பதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், அவற்றின் பாதிப்பு குறைந்ததாக இல்லை.

 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களால், தென்னையின் நீர்ச்சத்து மறைந்து, அதன் வளர்ச்சி தடைபடுகிறது. அதனால், காய்கள் பிடிக்காமல், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.

வேளாண் துறையின் ஆலோசனையின் படி, வெள்ளை ஈக்களைகட்டுப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் எடுபடவில்லை. தென்னை விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் மருந்து தெளித்தால் மட்டுமே, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். அதற்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மேற்கொள்ள வேண்டும். என அவர்கள் தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்