width:1600px height:1200px மேலாண்மை செய்திகள்

வடமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு




வடமாநிலங்களில் பூண்டு அறுவடை காரணமாக, வரத்து அதிகரித்து, விலை சரிந்தது.

தமிழக பூண்டு தேவையை, வட மாநிலங்களான மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள், 80 சதவீதம், நீலகிரி, 20 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. வடமாநிலங்களில், கடந்தாண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாததால், கடந்த செப்டம்பரில், அதன் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது, வடமாநிலங்களில் பூண்டு அறுவடை பணி தீவிரமடைந்தள்ளதால், அங்கிருந்து தமிழகம் வரும் பூண்டின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம்,

விருதுநகர், சென்னை மார்க்கெட்டுகளுக்கு, கடந்த மாதம் வரை, வாரம், 50 லாரிகளில் வந்த பூண்டு, தற்போது, 100 லாரிகளாகவும், நீலகிரியிலிருந்து, 15 லாரிகளில் வந்த பூண்டு, 50 லாரிகளாகவும் உயர்ந்துள்ளது. இதனால், விலை, கிலோவுக்கு, 40 ரூபாய் சரிந்தது. அதன்படி, வடமாநில நாட்டு பூண்டு முதல் ரகம் கிலோ, ரூ.280லிருந்து, ரூ.240, இரண்டாம் ரகம், ரூ.200லிருந்து ரூ.160, மூன்றாம் ரகம், ரூ.180லிருந்து ரூ.140 ஆக சரிந்தது. இதனால், நீலகிரி பூண்டு விலையும் சரிந்துள்ளது. அது, முதல் ரகம், ரூ.380லிருந்து ரூ.340, இரண்டாம் ரகம், ரூ.340லிருந்து ரூ.300, மூன்றாம் ரகம், ரூ.300லிருந்து ரூ.260 ஆக சரிந்தது.




Site For Sale Contact : 9894832938