கால்நடை வளர்ப்பில் பெரும்செலவு தீவனத்திற்காக மட்டுமே ஏற்படுகிறது. அத்தகைய தீவன புல்லின் விலை அதிகரிக்கும் போது மாற்று தீவன முறையை கடைபிடிக்கலாம்.
மேலும் இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் தீவன பற்றாக்குறையை மாற்று தீவனம் மூலம் நிவர்த்தி செய்யலாம். அத்தகைய மாற்று தீவனங்கள் குறித்து இங்கு காணலாம்.
தக்கைப்பு+ண்டு :
பொதுவாக விவசாயத்தில் தக்கைப்பு+ண்டு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
இந்த தக்கைப்பு+ண்டு வேகமாக வளரும் தன்மை கொண்ட பயறு வகை தீவனம் எனலாம்.
தக்கைப்பு+ண்டு விதைத்த 60 - 70 நாட்களில் அறுவடை செய்யலாம். இதனை 50 சதவீதம் பு+க்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை பசுந்தீவனம் கிடைக்கும். இந்த தீவனத்தில் 20-15 சதவீதம் தாது உப்புகள், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன.
தக்கை பு+ண்டை அறுவடை செய்தபின் சிறு துண்டுகளாக நறுக்கி பசுந்தீவனமாக பயன்படுத்தலாம்.
பொதுவாக 5-7 கிலோ அளவில் பசுமாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
மேலும் தக்கைபு+ண்டை உலர வைத்து கோடை மற்றும் வறட்சி காலங்களில் தீவனமாக பயன்படுத்தலாம்.
நீர்புல் அல்லது எருமைப்புல் :
நீர் தேங்கியுள்ள நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் இந்த நீர்ப்புல் வளரும் தன்மை கொண்டது.
இந்த புல் சுமார் 15 செ.மீ உள்ள உள்ளபோது அறுவடை செய்தால் மீண்டும் துளிர்த்து வளரும் தன்மை கொண்டது.
வருடத்திற்கு 5-6 முறை அறுவடை செய்யலாம்.
இந்த புல்லின் தண்டுகள் மிருதுவாக உள்ளதால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
மல்பெரி :
மல்பெரி இலை பொதுவாக பட்டுப்புழு வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மல்பெரி இலையை கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்.
மல்பெரி இலையில் 15 முதல் 20 சதவீதம் புரதம் உள்ளது.
மல்பெரி இலையை மற்ற கால்நடை தீவனங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
மல்பெரி இலையில் 2-3 சதவீதம் வரை கால்சியம் சத்து உள்ளது. மேலும் கந்தகம் சத்தும் நிறைந்துள்ளது.
இது கறவை மாடுகளுக்கு மிகச்சிறந்த தீவனமாகும்.
