சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 19.03.2020 (வியாழன்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
முகவரி :பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் - 630212.
முன்பதிவு செய்ய : 9488575716, 7708820505
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
பயிற்சி வகுப்பில் நாட்டுக்கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரிக்க வைத்தல், குஞ்சுகளை பறவைக்கூண்டில் வளர்த்தல், முறையான பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
