நமது நாட்டில் பராம்பரிய மரங்கள் பல உள்ளன. அவற்றில் ஈச்ச மரமும் ஒன்றாகும். அதை பற்றி இங்கு காண்போம்.
ரூடவச்சம் வறண்ட மற்றும் மிக வறண்ட நிலங்களில் அதிகம் காணப்படும் மரமாகும்.
இந்த மரமானது விதைகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. அதாவது பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் மூலம் இதன் விதைகள் பரவுகின்றன. இது வளர்வதற்கு மழைநீர் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
ஈச்ச மரத்தில் மூன்று ரகங்கள் உள்ளன. அதாவது உயரமாக வளரும் வகை, நடுத்தர உயரம் வளரும் வகை, மூன்றாவது வகை சிற்றீச்சை அதாவது இரண்டு அல்லது மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்து பின் காய்க்க ஆரம்பிக்கும்.
பொதுவாக மார்ச் மாதத்தில் பு+க்கள் தோன்றி, ஜுன் மாதம் இறுதியில் பழங்கள் கிடைக்கும். தேனீக்கள் மற்றும் சிறு வண்டுகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
முன்பெல்லாம் ஈச்ச மரத்தில் இருந்து கூடைகள், குறிப்பாக துடைப்பம், பாய்கள் போன்றவை தயார் செய்யப்பட்டன.
இந்த பழம் பேரீச்சம் பழங்களுக்கு நிகரான சத்துக்கள் கொண்டவை. இதில் இரும்பு மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.
ஈச்ச மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் சுவை மிகுந்ததாகவும், அதிக சத்துக்களை கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் இந்த மரம் இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவிபுரிகிறது.
தற்போது அழிந்து வரும் மரங்கள் பட்டியலில் இந்த மரங்களும் உள்ளன என்பது வறுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம் இப்பழங்களை விரும்பி சாப்பிடுபவைகளாக பறவைகள் மற்றும் அணில்கள் போன்ற உயிரினங்கள் உள்ளன.
மேலும் பறவைகள் கூடு கட்டுவதற்கு தேவையான பஞ்சு போன்ற இழைகள் ஈச்ச மரத்தில் அதிகம் கிடைப்பதால் அந்த மரத்தில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அது பறவைகளுக்கு பாதுகாப்பாகவும் அமைகிறது.
இத்தகைய மரங்களை அழிப்பதனால் மரங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் சில பறவைகள் மற்றும் விலங்கினங்களும் அழிந்து விடும் அபாயம் ஏற்படும்.
எனவே இயற்கையோடு ஒன்றிணைந்து விவசாயத்தையும், பிற உயிரினங்களையும் பாதுகாத்து வாழ்வோம்.
எங்களின் இந்த பயணம் உங்களால் மட்டுமே சாத்தியம்...
எங்களின் முயற்சியை ஊக்குவிக்க விரும்பினால் Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
