கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு பொதுவாகவே அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும் அதில் சில எளிய செயல்களை நாம் செய்வதன் மூலமும் காலநடைகளை நோய்கள் இல்லாமல் பாதுகாக்க முடியும்.
நாம் செய்ய வேண்டியவை :
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், கால்நடைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும் இதனால், மாட்டுத் தொழுவத்தில் எப்போதும் தண்ணீர் அதிகளவில் நிரம்பியிருக்க செய்ய வேண்டும்.
அந்தத் தண்ணீரில், எழுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து கலந்திருக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு பதில் 4 வேளையாக தண்ணீர் அளிக்க வைக்க வேண்டும்.
மாடுகளை நாள்தோறும் குளிப்பாட்ட வேண்டும்.
கறவை மாடுகளாக இருந்தால், மக்காச்சோள மாவு, சோளமாவு, அரிசி மாவு உள்ளிட்ட கலப்பு தீவனங்கள் வைக்க வேண்டும்.
அதாவது ஒரு லிட்டர் பால் கறக்கக் கூடிய மாடாக இருந்தால் 400 கிராமும், 5 லிட்டர் பால் கறக்கக் கூடிய மாடாக இருந்தால் 2 கிலோ கலப்பு தீவனமும் கொடுக்க வேண்டும்.
மாட்டுத் தொழுவத்தில், தினமும் மஞ்சள் தூள், நாய்த்துளசிச் செடிகளைப் போட்டு, சாம்பிராணி போட்டால் கொசுக்கள் வராது.
மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசிப் போட வேண்டும்.
இந்த செயல்களை செய்வதன் மூலமாகவே மாடுகளை தற்போது நிலவிவரும் வெயிலிலிருந்து பாதுகாக்க முடியும்.
