width:900px height:500px மேலாண்மை செய்திகள்

வெயில் அதிகரிப்பால் முருங்கை மரங்கள் பாதிப்பு




ஆண்டிபட்டி பகுதியில் வெயில் அதிகரிப்பால், முருங்கை மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவி்த்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் முருங்கை சாகுபடி நடைபெறுகிறது. அதிகப்படியான காற்று, மழை முருங்கை மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், வெயில், பனி காலங்களில் முருங்கை காய்ப்பு அதிகம் இருக்கும். தற்போது, முருங்கை மரங்களில் பூக்கள், காய்கள் அதிகம் முளைத்துள்ளன. இந்நிலையில், வெயிலின் தாக்கம் கடும் வறட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காய்கள் சிறுத்தும், பசுமையின்றியும் காணப்படுவதால், முருங்கை சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் விளையும் தரமான முருங்கை காய்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணங்களால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், கிணறுகளில் நீரின்றி அளவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கமும் முருங்கை மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது, முருங்கைக்காய் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தனர்.

 




தற்போதைய செய்திகள்