காற்றின் வேகம் பிற்பகலுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டாலும், இரவு வெப்பம் ஓரளவு உயரக் கூடும், கோடைகாலம் தொடங்குவதால், அடுத்து வரும் சில வாரங்களில் பண்ணைகளில் ஈக்களின் இனப்பெருக்கம் தொடங்கும். இதனால் அதிகளவில் எருவின் ஈரம், பண்ணையைச் சுற்றிலும் புல், பூண்டுகளின் வளர்ச்சி மற்றும் பண்ணைக்குள் தூய்மையின்மை ஆகியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈக்கள் தொந்தரவின்றி பண்ணை அமைக்க வேண்டுமானால், கோழி எருவானது ஈரமின்றியும், புல், பூண்டுகள் நீக்கப்பட்டும், நிப்பிள் மற்றும் குழாய்கள் கசிவின்றியும் இருக்க வேண்டும். இம்மூன்றையும் சரியான அளவில் செய்வதால், பெருமளவில் ஈக்கள் உற்பத்தியை தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
